தனது மாய சக்தி கிடைத்த உடனே அவர் சிறிது சக்தி மமதையால் வழி தவறி சென்றார் (நியூயார்க்கில் மாயாவி). பிறகு அவர் திருந்தினாலும் கூட அவரை மாட்ட வைக்க முயன்ற ஒரு விஞ்ஞானி வில்லனால் அவரை தீயவர் என நினைத்து மனிதவேட்டையாட முயன்றனர் பிரிட்டிஷ் இராணுவமும் காவல்துறையும் (யார் அந்த மாயாவி?). பிறகு அவர் நல்லவரென தெரிந்தது. அவரது செயற்கை கரத்துக்கு பலம் அளித்து அதில் பல்வேறு ஆயுதங்களை (துப்பாக்கி, கத்தி, மாயப்புகை, ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மற்றும் தொலைதூர இயக்கம்) அளித்து அவரை மிகத்திறமையான உளவாளி ஆக்கியது நிழல் படை (மந்திரவித்தை). அவ்வாறு ஆக்கப்பட்டதும் அவரது முதல் பணி ஹிப்னாட்டிஸ திறமையால் பல மேல்பதவி ஆட்களை தன் கைக்குள் போட்டு நாசவேலைகளை செய்த ஒரு மந்திரவாதியை தோற்கடிப்பதாகும்.
அவரது முத்துக்காமிக்ஸ் சாகஸங்கள்
- பாம்புத்தீவில் மாயாவி
- உறைபனி மர்மம்
- இமயத்தில் மாயாவி
- கொள்ளைக்கார பிசாசு
- நடுநிசி கள்வன்
- இயந்திரத்தலை மனிதர்கள்
- பாதாளநகரம்
- நாச அலைகள்
- நயாகராவில் மாயாவி
- மர்மத்தீவில் மாயாவி
- கொள்ளைக்கார மாயாவி
இரும்புக்கை மாயாவியின் இந்திய விஜயம்
ஏதாவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள். பிறகு ரொம்ப சொதப்பலான மாயாவி கதைகள் வெளியாயின. அண்மையில் வெளியான கௌபாய் ஸ்பெஷல் காமிக்ஸ் இதழில் கூட இரும்புக்கை மாயாவி கதை வெளியாகியிருந்தது. முந்தைய இரும்புக்கை மாயாவி காமிக்ஸுகளுடன் ஒப்பிடுகையில் படு சொதப்பல். இப்போது காமிக்ஸ் க்ளாஸிக்ஸில் பழைய மாயாவி கதைகளை வெளியிடுகிறது முத்து காமிக்ஸ்.
மாயாவியின் விக்கிபீடியா பக்கம்:
http://en.wikipedia.org/wiki/Steel_Claw